அஸ்வெசுவ நலன்புரி திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டகொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும்

அஸ்வெசுவ நலன்புரி திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டகொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும்

அஸ்வெசுவ நலன்புரி திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
 

அஸ்வெசும் நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலஅவகாசம் இந்தமாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது 

தற்போது, சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசு கொடுப்பனவுக்கு தகுதிபெற்றுள்ளனர்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான இந்த ஆண்டுக்கான பாதீட்டில் 205 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்