ஊவா மாகாண ஆளுநரின் மகன் இன்று காவல்துறை முன்னிலையில் பிரசன்னமாவார்,

ஊவா மாகாண ஆளுநரின் மகன் இன்று  காவல்துறை முன்னிலையில் பிரசன்னமாவார்,

தனது மகன் மொஹமட் இசாம் ஜமால்தீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், இன்று  காவல்துறை முன்னிலையில் பிரசன்னமாவார்; என்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

தமது மகன் தலைமறைவாகவில்லை. செவ்வாய்க்கிழமையோ அல்லது அதற்கு முன்னதாகவோ காவல் துறையினரிடம் சரணடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்துள்ளார் 
அவர் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதை காவல்துறையினரே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் முஸம்மில் தெரிவித்துள்ளார் 

கொழும்பு ஹெவ்லாக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது இசாம் ஜமால்தீனைக் கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ஜமால்தீன் பெண்ணைத் தாக்கியதாகவும், இதன்போது காயங்களுக்கு உள்ளான பெண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர்; கூறியுள்ளனர்.