ஈழ தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது!

ஈழ தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த குரல் ஓய்ந்தது!

சிங்கள பேரினவாத தலைமைகளுக்கு மத்தியில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக ஒலித்த குரல் இன்று மறைந்தது.

ஒட்டுமொத்த தமிழினத்துக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன பிரச்சினைக்களுக்கும் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் தனித்து நின்று குரல் கொடுத்த நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன சிங்கள இனதவராக இருந்தாலும் அவருடைய மறைவு தமிழ் மக்களுக்கு ஓர் பேரிழப்பாகவே அமையும்.

தமிழின விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிய தமிழ் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தேசப்பற்றையும் வீரத்தையும் சிங்கள மக்கள் அறியும்படி செய்த பெரும் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் பல தவறான செயற்பாடுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டியதுடன் அவற்றிற்கு எதிராகவும் போராடினார்.

அநீதிகளை உலகறிய செய்த ஆளுமை 
அதுமட்டுமன்றி சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளை உலகறிய செய்ததில் இவருக்கும் ஒரு பங்குண்டு.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் யதார்த்த அரசியலையும் ஆளுமையையும் அவர் பதிவு செய்யும் கருத்துக்கள் சொல்லி செல்லும்.

தாய்நாட்டு வளங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தும் மகிந்த ராஜபக்சவுடன் ஒப்பிடுகையில் தாய் மண் மீது பிரபாகரன் அதிக பற்றுக் கொண்டிருந்தார் என்று, தனது இனத்துக்கு எதிரியாக தெரிந்த தமிழின தலைவர் பிரபாகரன் பற்றி அவர் புகழ்ந்துள்ளார்.

இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளானாலும் பிரபாகரன் நாமம் வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிட முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டி போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளிவாய்க்கால் வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்கு பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காக தன்னை தியாகம் செய்தது. வரலாற்றில் அவருக்கு நிகரான ஒருவரை பார்ப்பது கடினம்.

அவரின் சில கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது.'' என்று ஓர் போர் வீரரின் உண்மையான கொள்கையையும் வீரத்தையும் பாராட்டிய ஆளுமை சொல்லும் அவரது அரசியலை.

தமிழர் தாயகம்
தமிழர் தாயகம் என்ற பதத்தை தனது பிரச்சாரத்தில் பயன்படுத்தி, அது இன்று அழிந்து போயுள்ளது ஆனால் யுத்தம் முடிவடையவில்லை என்று கூறிய கலாநிதி கருணாரத்ன, சமத்துவம், சுயாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தேசிய ஒருமைப்பாடு என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டார்.

2009 பெப்ரவரியில் யுத்தத்தின் உச்சக்கட்டத்தில், உலகம் முழுவதிலும் உள்ள 50 தொழிலாளர் கட்சிகளால் கையொப்பமிடப்பட்ட பிரகடனத்தை கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன முன்வைத்தார். அதில் "நாங்கள், தொழிலாளர் கட்சிகளின் கீழ் கையொப்பமிடப்பட்ட தலைவர்கள்.  இலங்கை அரசாங்கம் ஆயிரக்கணக்கான தமிழர்களை அழிக்கக்கூடிய தாக்குதல்களை நிறுத்த வேண்டும் மற்றும் தமிழர் தாயகத்திற்கு இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு உடன்பட வேண்டும்."என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில், உண்மையில் இந்தியாவும், அமெரிக்காவும்  இலங்கையில் தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைப்பதை விரும்பவில்லை. இலங்கையின் நிலப்பகுதிகளையும், கடல் வளங்களையும் ஆக்ரமித்துக் கொள்ளவே விரும்புகின்றன.

எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்றும் கருணாரத்ன கூறி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராகவும் தமிழர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார்.

தமிழர் நிலத்தின் மறுவாழ்வு
தமிழர் நிலத்தின் மறுவாழ்வுக்காக சிவில் சமூகம் மற்றும் சிவில் நிர்வாகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது அவரது யோசனையாக இருந்தது. இது தொடர்பாகவும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் தனது கட்சி பிரித்தானிய தமிழர் பேரவையுடன் (BTF) இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்து அதற்காக செயற்பட்டார்.

கலாநிதி கருணாரத்ன, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் பி.நடேசன், குமார் பொன்னம்பலம் மற்றும் மறைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருடன் தனது நெருங்கிய தொடர்பை வைத்திருந்தார்.


அரசியல் கைதிகள் விடுதலை
இதேவேளை சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்தது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தார். பயங்ரவாத தடைச்சட்டம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் அல்ல. அந்த சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்துவைத்திருப்பது முறையானதல்ல.

இன்று வடக்கிலோ கிழக்கிலோ அல்லது தெற்கிலோ பயங்ரவாத செயற்பாடுகள் இடம் பெறுவதாக எந்த தகவலும் இல்லை. அப்படியாயின் எவ்வாறு பயங்ரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை வைத்திருக்க முடியும்? என்று தனது ஆட்சி காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல் கொடுத்தார்.

அதனடிப்படையிலேயே 71,88 மற்றும் 89 காலப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவ்வாறே தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்று அன்றே தமிழ் கைதிகளின் விடுதலைக்கு ஆதரவாக போராடினார்.


இவ்வாறு தனது அரசியல் வாழ்வில் எந்த இனத்துக்கும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் கொள்கைகளுக்கு ஆதரவாக செயற்படாமல், உண்மைக்கும் நீதிக்கும் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் மறைவு தமிழினத்துக்கு மற்றுமொரு கறுப்பு நாளை தந்து சென்றுள்ள