அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு!

அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான காலநிலை முன்னறிவிப்பு!

இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கிளத்தினால் இன்று (08.05.2024) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட அதிகார பூர்வமான வானிலை முன்னறிவிப்பு:

இலங்கையின் அனேகமான பகுதிகளில் மழை கொண்ட காலநிலை இன்று முதல் சில நாட்களுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் அனேகமான பிராந்தியங்களின் பல பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

சில இடங்களில் முக்கியமாக வட மத்திய, மத்திய, சபரகமுவ, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மி.மீ. மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடான அம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளில் காலை வேலைகளிலும் ஓரளவு மழை காணப்படும்.

மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேலைகளில் பனிமூட்டம் காணப்படும். 

இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.