இன்றைய காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

இன்றைய காலநிலை தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களுக்கு இன்று (19) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை  “எச்சரிக்கை” மட்டத்தில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்று அந்தத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும் என்று விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் சுகாதார நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பாடசாலை தொடர்பில் மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவ தெரிவித்தார்.

இந்த நாட்களில் பாடசாலைகளில் நடைபெறும் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது ஆகியவை பெறப்பட்ட சுகாதார ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் , நாட்டில் பாதகமான காற்றின் தரக் குறியீட்டில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது