பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை வழமைக்கு!

பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை வழமைக்கு!

உடுவர பிரதேசத்தில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை இன்று (2) காலை முதல் வழமைப்போல் இயங்குமென நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டை - பதுளை வரையிலான ரயில்கள் இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பதுளை பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை உடுல்லை புகையிரத பாதையின் உடுவர 7 கனுவ பகுதியில் உள்ள புகையிரத பாதையில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்தது.

இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.