குடிநீர் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை மக்களுக்கு குடிநீர் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி கீதிகா ரத்னவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது தண்ணீர் அருந்தும் போதும் உணவு உண்ணும்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பச்சை காய்கறிகள் மற்றும் மூலிகைகளை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது என்று அவர் கூறினார்.
எந்த காரணத்திற்காகவும் நீரை கொதிக்க வைக்காமல் பருக வேண்டாம் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுமாறும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அபாயம் எற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளம் சூழ்ந்த கிணறுகளை பயன்படுத்தும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கீதிகா ரத்னவர்தன அறிவித்துள்ளார்.