ஓரங்கட்டப்பட்ட இன சமூகங்களை சந்திக்கும் அமெரிக்க பிரதிநிதி!

இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித்  (Desirée Cormier Smith) உத்தியோகபூர்வ விஜயம்

ஓரங்கட்டப்பட்ட இன சமூகங்களை சந்திக்கும் அமெரிக்க பிரதிநிதி!

இன சமத்துவம் மற்றும் நீதிக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித்  (Desirée Cormier Smith) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.

இன்றைய தினம் வருகைத்தரும் அவர் 15 ஆம் திகதி இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த காலப்பகுதியில், கொழும்பு, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதற்காகவும், அவர், இலங்கையின் பல்வேறு சமூகங்களுடன் கலந்துரையாடவுள்ளார்.

மலையக தமிழர்கள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட இன சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன் ஆயத்தங்களுக்கு, அமெரிக்க அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை இந்த கலந்துரையாடல்கள் வலுசேர்க்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியாவில் அமெரிக்கத் தூதரகத்தின் ஆங்கில மொழி கற்றலுக்கான உதவித்தொகைத் திட்டத்தைத் ஆரம்பிப்பது அவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை வழங்குவதில் இந்த தி;ட்டம் கவனம் செலுத்துகின்றது.

மலையக தமிழ் சமூகத்தின் இளைஞர்களை மேம்படுத்தும் முயற்சியில், மேற்கொள்ளப்பட்ட மூன்று மாத பயிற்சி முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்த 25 மாணவர்களுக்கு, அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியான டீசிரி கோமியர் ஸ்மித்; விருது வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.