அமெரிக்க உளவு விமானம்  இலங்கை வருகை!

அமெரிக்க உளவு விமானம்  இலங்கை வருகை!

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் உளவு விமானம் ஒன்று இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கடல்வழிப் பாதுகாப்பு கற்பிக்கும் விசேட பயிற்சித் திட்டத்திற்காக என் 7700 என்ற குறித்த விமானமும் அதன் பணியாளர்களும் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது.

 குறித்த விமானத்தை பயன்படுத்தி புலனாய்வு கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் நடவடிக்கைகள் என்பவற்றை மேற்கொள்வது தொடர்பான பயிற்சி நிகழ்ச்சி ரத்மலானை விமானப் படை தளத்தில் நாளை வரை இடம்பெறவுள்ளன.
 
கடல் எல்லை விழிப்புணர்வில் இலங்கை விமானப் படையினரின் திறன்களை மேம்படுத்துவது இந்த கண்காணிப்பு மற்றும் உளவு பார்த்தல் பயற்சியின் முதன்மை நோக்கம் என விமானப்படை தெரிவித்துள்ளது.
 
இந்த பயிற்சி நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மனிதாபிமான உதவி, அனர்த்த நிவாரணம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

 

அத்துடன், பாதுகாப்பான மற்றும் வளமான இந்து -பசிபிக் பிராந்தியத்துக்காக அமெரிக்கா தொடர்ந்தும் பங்களிப்பை வழங்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.