வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.