இலங்கையின் முதன்மை பணவீக்கம் ஓகஸ்ட் மாதம் மேலும் வீழ்ச்சி!
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், கடந்த ஓகஸ்ட் மாதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், கடந்த ஓகஸ்ட் மாதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், இன்றைய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூலை மாதம்; 4.6 சதவீதமாக பதிவான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம், ஓகஸ்ட் மாதம், 2.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மறை 2.5 சதவீதமாக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில், மறை 5.4 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 10.9 சதவீதமாக பதிவான உணவல்லா பணவீக்கம் ஓகஸ்ட் மாதம் 9.0 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.