நாணயக் கொள்கை தொடர்பான இரண்டாவது அறிக்கை வெளியீடு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை தொடர்பான இரண்டாவது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பெப்ரவரி மாதத்திற்கான அறிக்கையை வெளியிட்டுள்ள இலங்கை மத்திய வங்கி, பேரின பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் படிப்படியான பொருளாதார மீட்சியை நோக்கிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அண்மைய வரித் திருத்தங்கள் மற்றும் வழங்கல் துறையில் ஏற்பட்ட பின்னடைவுகள் பணவீக்க இலக்கில் இருந்து விலகிச் செல்ல கூடும் என்ற நிலைமை காணப்பட்டாலும் அது சிறிது காலமே காணப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன், வருடாந்த பொருளாதார வளர்ச்சியானது 2024இல் சாதகமானதாக மாற்றமடைந்து, நடுத்தர காலப்பகுதியில் படிப்படியாக அதன் ஆற்றலை அடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.