ரூ.1.5 பில்லியன் மதுவரி கட்டணத்தை செலுத்தாத நிறுவனங்களின் தகவல்களை தவறவிட்ட அரசாங்கம்!

1.5 பில்லியன் ரூபாயை மதுவரி கட்டணமாக செலுத்தாத இரண்டு நிறுவனங்கள் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.

மதுவரித் திணைக்களம் நேற்றைய தினம் குறித்த குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில் தகவல்கள் தவறவிடப்பட்ட விபரம் தெரியவந்தது.

க்ளோப்  பிளென்டர் மற்றும் வயம்ப ஸ்பிரிட்ஸ் ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு நிறுவனங்களே மதுவரியை செலுத்த தவறியுள்ளதாக மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் மதுவரி தாமதக் கட்டணத்தை செலுத்த வேண்டிய 7 நிறுவனங்கள் உள்ளதாகவும் அந்த நிறுவனங்கள் அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் குறித்த கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் மதுவரித் திணைக்களம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்படி, அன்றைய தினத்துக்குள் மதுவரி தாமதக்கட்டணத்தை செலுத்துவதற்கு குறித்த நிறுவனங்கள் தவறினால் அவற்றின் அனுமதி பத்திரத்தை அடுத்த மாதம் 30ஆம் திகதிக்குள் ரத்துசெய்யுமாறு நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது.