கங்கைகளின் நீர்மட்டம் உயர்கிறது - 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
குடா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர பிரதேசங்களுக்கு பாரிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மில்லகந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் நில்வலா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பிட்டபெத்தர பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக கடற்படையின் 10 விசேட அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக களனி பெருக்கெடுத்துள்ளமையினால் மல்வானை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அத்தோடு, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது,
அத்துடன், கொழும்பு – அவிசாவளை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், கனரக வாகனங்கள் மாத்திரம் செல்ல முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பின் களுத்துறை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (02) சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.
அதன்படி கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
????எச்சரிக்கை நிலை 3 - வெளியேறவும் (சிவப்பு)
கொழும்பு மாவட்டம்:
- பாதுக்கை
களுத்துறை மாவட்டம்:
- மத்துமை
- இங்கிரிய
- பாலிந்தநுவர
- புலத்சிங்கள
இரத்தினபுரி மாவட்டம்:
- குருவிட்ட
- எலபாத
- கிரியெல்ல
- அயகம
- எஹெலியகொடை
- கலவானை
- இரத்தினபுரி
எச்சரிக்கை நிலை 2 - எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)
கொழும்பு மாவட்டம்:
- சீதாவாக்கை
அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல
களுத்துறை மாவட்டம்:
-வலல்லாவிட்ட
- ஹொரணை
கண்டி மாவட்டம்:
- உடபலாத
கேகாலை மாவட்டம்:
- தெஹியோவிட்ட
- தெரணியாகலை
மாத்தறை மாவட்டம்:
- முல்லட்டியன
- பிட்டபெத்தர
- கொட்டபொல
நுவரெலியா மாவட்டம்:
- அமம்பகமுவ
- கொத்மலை
இரத்தினபுரி மாவட்டம்:
- இம்புல்பே
எச்சரிக்கை நிலை 1 - எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)
காலி மாவட்டம்:
- தவகம
- நியகம
- எல்பிட்டிய
- நாகொடை
- நெலுவ
அம்பாந்தோட்டை மாவட்டம்:
- கட்டுவன
களுத்துறை மாவட்டம்:
- தொடங்கொடை
- அகலவத்தை
கண்டி மாவட்டம்:
-பாஸ்பாகே கோரல
- கங்க இஹல கோரல
- உடுநுவர
- கங்கவட்ட கோரல
- யட்டிநுவர
கேகாலை மாவட்டம்:
- யட்டியாந்தோட்ட
- புலத்கொஹுபிட்டிய
- ருவன்வெல்ல
- ரம்புக்கன
- வரக்காபொல
- கலிகமுவ
- அரநாயக்க
- மாவனெல்லை
- கேகாலை
குருநாகல் மாவட்டம்:
- மாவத்தகம
- ரிதிகம
மாத்தறை மாவட்டம்:
- பஸ்கொட
- அக்குரஸ்ஸ
நுவரெலியா மாவட்டம்:
- நுவரெலியா
இரத்தினபுரி மாவட்டம்:
- பலாங்கொடை
இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.