Re-Mal சூறாவளியினால் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்?

தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் குறிப்பிட்டது போன்று ஒரு தாழமுக்கம் இன்று உருவாகி உள்ளது.

Re-Mal சூறாவளியினால் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்?
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் 21ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கம் உருவாகி
அது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளி உருவாகலாம் எனவும், அவ்வாறு அது சூறாவளியாக உருவாகும் சந்தர்ப்பத்தில் அதற்கு றீமால் (Remal) என்னும் பெயர் சூட்டப்படும் எனவும் கடந்த 12ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.
 
தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் குறிப்பிட்டது போன்று ஒரு தாழமுக்கம் இன்று உருவாகி உள்ளது.
இதனை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் இன்று (22) உறுதிப்படுத்தி உள்ளன.
 
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் இன்று ஒரு தாழமுக்க நிலை உருவாகியுள்ளது.
 
இது எதிர்வரும் நாட்களில் வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து எதிர்வரும் 24ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, அதன்பின்னர் அது மேலும் வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் வழங்கப்படும்.
 
இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் - கொல்கத்தா) ஊறுத்து செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இதேவேளை இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில், இலங்கையின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரபிய கடல் பிராந்தியத்தில் காற்றானது 60kh/h - 70km/h வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடல் கொந்தளிப்பும் ஏற்படும்.
 
இதன் காரணமாக மீனவர் சமூகம் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தியங்களில் தொழில் ரீதியான செற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும், திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.