அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி ஆரம்பம்!

சுகாதார அமைச்சினால் அரச ஊழியர்களை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு யோகா பயிற்சிநெறி ஆரம்ப விசேட திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்களுக்கு யோகா பயிற்சி ஆரம்பம்!

சுகாதார அமைச்சினால் அரச ஊழியர்களை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு யோகா பயிற்சிநெறி ஆரம்ப விசேட திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் அரச ஊழியர்களை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு சுகாதார அமைச்சினால் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழியர்களுக்கான நடாத்தப்படவுள்ள யோகா பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு இன்று (22) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாநிதி. பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

அரச ஊழியர்களை உளவளத்துடனும், ஆரோக்கியத்துடனும் தொற்றா நோய்கள் வராமல் தடுப்பதற்காகவும் இந்த விசேட திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு கடமை நாட்களில் காலை வேளைகளில் இந்த விசேட பயிற்சி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு இதனூடாக மாவட்ட செயலக அரச உத்தியோகத்தர்கள் யோகா கலை தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொள்வதுடன் தமது வாழ்வில் யோகா பயிற்சினை பிரயோகப்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. 

உத்தியோகத்தர்களுக்கான யோகா உடற்பயிச்சியினை மண்முனைப்பற்று பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன் நடாத்தி வைத்தார்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய நிபுணர் கிரிசாந்த், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் வளவாளர்களாக கலந்து கொண்டவர்கள் யோகாவின் முக்கியத்துவம் பற்றியும் தொற்று நோய்களிலிருந்து எவ்வாறு எம்மை பாதுகாக்கின்றது எனவும். உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து எவ்வாறு மீட்பது சம்பந்தமாகவும் விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன். தொற்று நோய்களிலிருந்து விடுவிக்கும் யோகா பயிற்சிகளும் இங்கு கலந்து கொண்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்