ஈழத்துத் திரைத்துறை படைப்பாளிகளுக்கான அறிவித்தல்
1. விண்ணப்ப படிவம்
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் -பிரான்சு நடாத்தும் லெப்.கேணல் தவம் நினைவு சுமந்த திரைப்பட விழா 01-ஒக்ரோபர் 2023இற்கான படைப்புக்கள் சார்ந்த விதிமுறைகள்.
இவ்விழாவில் ஈழத்தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். (இது தற்காலிக ஏற்பாடு.
காரணம் இறுதியில் தரப்பட்டுள்ளது)
படைப்புக்கள் ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சமூக, அரசியல், கலை, இலக்கிய பண்பாட்டு விழுமியங்களுக்கு ஈறு செய்யாதனவாக இருத்தல் வேண்டும்
குறித்த படைப்பொன்று குறிந்த படைப்பாளிகளுக்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு ஒரு படைப்பாளியானவர்,
குறித்த படைப்பொன்றை இவ்விழாவிற்கு அனுப்பி வைப்பதன் மூலம். அப்படைப்பானது இவ்விழாவில் பங்கு பற்றுதல்,
திரையிடப்படுதல், விருது பெறுதல் வரையிலான அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவராகவும் ஏற்றவராகவும் இருக்கிறார்
படைப்புக்கள் 01-11-2019 இற்குப் பின்னான காலத்தில் உருவாக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.
தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பேசப்படும் இடங்களில், வசனவரிகள் தமிழில் எழுத்துவடிவில் தரப்படுதல் வேண்டும்.
படைப்புக்கள் புதியனவாவோ, ஏற்கனவே போட்டிகளில் பங்குபற்றியனவாகவோ, திரையிடப்பட்டனவாகவோ, பொது இணைய வெளிகளில் பார்வைக்காகப் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் உள்ளனவாகவோ இருக்கலாம்.
இவ்விழாவில் பங்குபற்றும் படைப்புக்கள் பொது இணைய வெளிகளில் இருந்து எம்மால், பதிவிறக்கம் செய்யப்படமாட்டா. -அவை இவ்விழாவிற்கென தனியாக பதிவேற்றப்பட்டு 'கடவுச் சொல்' உடன் கூடிய விசேட இணைப்புடன் கீழ்க்காணும் முகவரிக்கு
அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
- படைப்புக்கள் டி.வி.டி மூலமாகவும் தரமாகப் பதிவுசெய்து அனுப்பி வைக்கப்படலாம்.
ஒரு படைப்பாளி தனித்தனியாக ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புக்களையும் வேறுபட்ட வடிவங்களையும் அனுப்பலாம் குறும்படம் 40 நிமிடங்களுக்கு உட்பட்டவையாக இருக்கவேண்டும் முழு நீளப்படம் 70 நிமிடங்களுக்கு மேற்பட்டதாக
இருக்கவேண்டும்.
-அதேவேளை, குறித்த ஒரு படைப்பானது, குறும்பட நிளப்பட நேர விதிகளை மீறி அமைந்திருந்தால், 2023 திரைப்பட விழாவைப் பொறுத்தவரை இம்முறை மட்டும். விதிநீங்கலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரமாக இருக்கும் பட்சத்தில் இவ்விழாவில் பங்கு பற்றியதான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
-படைப்புக்கள் எதுவும் திருப்பி அனுப்பப்படமாட்டாது.
படைப்புகள், நடுவர்களால் பார்வையிடப்படும் வேளையில் தன்னார்வத் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர்
போட்டி தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் தொலைபேசி அழைப்புகள் அனுமதிக்கப்படமாட்டா
நடுவர்களின் முடிவே இறுதியானது.
படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி- CCTF. 12 CHEMIN DU MOULIN BASSET / 93200 SAINT-DENIS மின்னஞ்சல் முகவரி- cctffrance.2015@gmail.com
பேரன்பிற்குரிய தமிழ் பேசும் நல்லுலகே, நல்லுறவே வணக்கம்.
இவ் விழாவின் நோக்கமானது, ஈழத்தமிழ் திரையுலகிள் தரத்தை உயர்த்துவதாகும். இது எமது அவார பணிகளுள் ஒன்றாகும். இந்த உன்னத நிலையினை நாம் அடைவதற்கான முதற் செயற்பாடே இவ்விழாவாகும்.
கூடிய விரைவில் இது அனைத்து தமிழ்ப் பரப்பையும் அரவணைத்து முன்னேறும்.
அவ்வகையில் இத்தற்காலிக ஏற்பாட்டினை தாயுள்ளம் கொண்டு ஏற்பது மட்டுமல்லாமல், படவிமர்சனங்களையும், ஆதரவையும் வழமைபோல் வழங்கி, நாம் முன்னகர உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
தமிழர்கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு