அஸ்வெசுமவுக்கு சிறப்புக் குழு நியமனம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை இழந்த சமுர்த்தி பயனாளர்கள் குறித்து ஆராய்வதற்கு 10 பேரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித்த ஹேரத்தின் ஆலோசனைக்கிணங்க இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின்போது ஏற்பட்ட சிக்கல் நிலையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது