உயர்தரத்தில் மூன்று 'A' சித்தி பெற்ற பார்வையற்ற மாணவி!

உயர்தரத்தில் மூன்று 'A' சித்தி பெற்ற பார்வையற்ற மாணவி!

குருநாகல் பிதுர்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாஷா கவிந்தி ஹேரத் என்ற பார்வையற்ற மாணவி 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் மூன்று 'A' சித்திகளைப் பெற்றுள்ளார்.

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், தனிப்பட்ட விண்ணப்பதாரராக கடந்த வருடம் பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

பொருளாதாரம், தர்க்கம், அரசியல் அறிவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் அவர் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

குருநாகல் மஹிந்த மகா வித்தியாலயத்திலிருந்து 2021ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஹிமாஷா ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்துள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான பாட்டுப் போட்டியில், நாடளாவிய ரீதியில் முதலாவதாக இடத்தை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.