டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்கம் அவதானம்! 

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் சிரமதான நடவடிக்கை மற்றும் பெதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தடன் இணைந்து, கிராம மட்ட அமைப்புக்கள், மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இம்மாத இறுத்திக்குள் இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.