ஐபோன் கைத்தொலைபேசிகளுக்கு அருகில் உறங்க வேண்டாம் - அப்பிள் எச்சரிக்கை!
ஐபோன்கள் நன்கு காற்றோட்டமுள்ள மற்றும் மேசைகள் போன்ற தட்டையான பரப்புகளில் பிரத்தியேகமாக மின்னேற்றப்பட வேண்டும் என அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
ஐபோன்கள் நன்கு காற்றோட்டமுள்ள மற்றும் மேசைகள் போன்ற தட்டையான பரப்புகளில் பிரத்தியேகமாக மின்னேற்றப்பட வேண்டும் என அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், உறங்கும் இடத்திலோ, கட்டிலின் மீதோ ஐபோன்களை வைத்து மின்னேற்றுவது அபாயகரமானது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அப்பிளின் இணைய பயனர் வழிகாட்டியில் சேர்க்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, ஸ்மார்ட் கைத்தொலைபேசிகளை வைத்திருக்கும் போது உறங்கும் பழக்கம் உள்ளவர்களை எச்சரிக்கிறது.
“ஒரு சக்தி மூலத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் போது ஐ-போன் கைத்தொலைபேசி, மின்னேற்றி (அடாப்டர்) அல்லது தொடர்பற்ற மின்னேற்றி (வயர்லெஸ் சார்ஜர்) ஆகியவற்றின் மீது உறங்க வேண்டாம் அல்லது ஒரு போர்வை, தலையணை அல்லது உங்கள் உடலின் மீது படும்படி வைக்க வேண்டாம்” என்று நிறுவனம் அதன் வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.
ஐபோன்கள் நன்கு காற்றோட்டமான சூழல்களிலும், மேசைகள் போன்ற தட்டையான பரப்புகளிலும் பிரத்தியேகமாக மின்னேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் நிறுவனத்தின் வழிகாட்டுதல் அறிவுறுத்துகிறது.
காற்றோட்டமற்ற இடங்கள் காரணமாக வெப்பத்தை எளிதில் வெளியிட முடியாமல் போகும் தருணங்களில் தீப்பற்றக் கூடிய அபாயம் உள்ளது.
இதன் விளைவாக, உங்கள் தலையணைக்கு அடியில் மின்னேற்றப்படும் தொலைபேசியை வைப்பது, ஸ்மார்ட்போன் பயனர்கள் மேற்கொள்ளக்கூடிய மிகவும் பாதுகாப்பற்ற நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.