திருட்டு சம்பவத்தில் சிக்கிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்
நியூஸிலாந்தின் முன்னாள் பெண் பாராளுமன்ற உறுப்பினரான கோல்ரிஸ் கஹ்ரமான் திருட்டு சம்பவம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அத்துடன் அவர் தான் செய்த தவறை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் பிறந்த கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குடும்பத்தினருக்கு நியூஸிலாந்தில் அரசியல் புகலிடம் கிடைத்தபோது நியூஸிலாந்துக்கு புலம்பெயர்ந்தார்.
மேலும் சட்டத்தரணியான அவர் 2017ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.