அதிக வரி விதிக்கும் அமெரிக்கா
கனடா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீது 25 சதவீதமும், சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமான வகையில் பென்டனைல் எனப்படும் மருந்து பொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பென்டனைல் என்ற மருந்துப் பொருள் வலி நிவாரணியாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் குறித்த மருந்து ஒவ்வாமையால் கோடிக்கணக்கான அமெரிக்க மக்கள் இறந்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, இந்த பென்டனைலை விநியோகித்ததற்காக கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு வரிகளை விதிப்பது என ட்ரம்ப் தலைமையிலான அரசு முடிவு செய்தது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு இன்று(1) முதல் அமுலுக்கு வரும் என தகவல் தெரிவிக்கின்றது.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறும்போது,
மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீதமும் சீனா மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத வகையில் பென்டனைலை அனுப்பியதற்காக ட்ரம்ப் இந்த வரி விதிப்பை கொண்டு வந்துள்ளார்.
இதனால், கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பலியானார்கள் என தெரிவித்துள்ளார்
இந்த நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வரும்.
எனினும், மார்ச் 1ஆம்திகதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்துள்ள கரோலின், அவை பொய்யானவை என்றும், பெப்ரவரி 1ஆம்திகதி முதல் இந்த வரி விதிப்பை அமுலுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டமிட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.