ஐரோப்பிய நாடுகளில் எகிரும் வெப்பநிலை - இத்தாலியில் சிவப்பு எச்சரிக்கை

ஐரோப்பாவில் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் கடும் வெப்பம் மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் எகிரும்  வெப்பநிலை - இத்தாலியில்   சிவப்பு எச்சரிக்கை

ஐரோப்பாவில் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நிலவும் கடும் வெப்பம் மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக கிரீஸில் காட்டுத்தீ ஏற்பட்டமையால் குறித்த பகுதியிலுள்ள விடுமுறை முகாம் ஒன்றிலிருந்து ஆயிரத்து 200 சிறுவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இத்தாலியில் 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இறுதியாக கடந்த 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.

இந்தநிலையில் ஐரோப்பியாவில் தற்போது நிலவும் வெப்ப அலையானது அடுத்த மாதமும் தொடரலாம்.

புவி வெப்பமடைதலின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம் சீனாவில் தற்காலிகமாக நேற்று முன்தினம் 52.2 பாகை செல்சியஸ் அளவில் அதிகபட்ச வெப்பநிலையை பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின், தென்மேற்குப் பகுதிகளிலும் அதிக வெப்பநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கலிஃபோர்னியாவில் உள்ள டெத் வேலி பகுதியில் 53.9 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.