மாலைதீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் - அபாய எச்சரிக்கை இல்லை!
மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.
குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896 கிலோமீற்றர் தொலைவில் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று இலங்கை நேரப்படி காலை 07.25 மணியளவில் இந்தோனேசிய கடல் பிராந்தியத்தில் 4.1 ரிக்டர் அளவில் 10km ஆழத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
இந்நிலையில், ஜப்பானில் கடந்த முதலாம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.