கந்தளாய் பேரமடு பகுதியில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு!
திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரமடு பகுதியில் தனது தோட்டத்துக்கு புகுந்த காட்டு யானையை விரட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற ஒருவர் (04) காலை யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

கந்தளாய் பேரமடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.எம்.குணவர்தன வயது (64) நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானையை சத்தம் கேட்டு, விரட்ட வீட்டை விட்டு வெளியே வந்த போது காட்டு யானை அவரை தாக்கியுள்ளது.
இந்தநிலையில், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக கந்தளாய் பேரமடு கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
சோமாவதி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வருவதாகவும், யானை வேலி உரிய முறையில் செயல்படுத்தப்படாததால் தங்கள் கிராமங்களுக்கு காட்டு யானைகள் புகுந்து நாசம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
யானைத் தொல்லையால் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குக் காரணமான அரசியல் அதிகாரம் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.