துப்பாக்கி சுடவில்லை என்பதால் கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர்கள் தப்பியோட்டம்!
ஹம்பாந்தோட்டை - பதகிரிய பிரதேசத்தில் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஹம்பாந்தோட்டை - பதகிரிய பிரதேசத்தில் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மகிழுந்தில் பயணித்த இருவர், குறித்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
எனினும், அதன்போது துப்பாக்கி இயங்காததால் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் அவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 44 வயதுடைய நபர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.