நாமல் ராஜபக்க்ஷவின் சொந்த ஊரில் கூட்டத்தில் கல்லெறி சம்பவத்தால் பரபரப்பு!
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில் கல் எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்ட நிலையில், ராஜபக்ச குடும்பத்தினர் இந்த தாக்குதலால் அச்சமடைதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த கூட்டத்தால் ஜனாதிபதி வேட்பாளர்களான நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பங்கேற்கவிருந்த போதிலும், சம்பவத்தின் பின்னர் அவர்கள் பங்கேற்கவில்லை.
அதேவேளை கூட்டத்தில் இடம்பெற்ற , கல்வீச்சு தாக்குதலில் காயமடைந்த குழந்தை ஒன்று ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமலின் தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ வைத்தியசாலைக்கு சென்று குழந்தையின் நலம் விசாரித்துள்ளார்.
அதேவேளை, முன்னொரு காலத்தில் மகிந்தவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையில், தற்போது ராஜபக்க்ஷ குடும்ப கூட்டத்தில் கல்லெறியப்பட்ட சம்பவம் ராஜபக்க்ஷ குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.