துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்!

துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்!

சுகாதார அமைச்சரான நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதான வைத்தியசாலையில் துப்பரவுப்பணியில் ஈடுபட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் “துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர்!

புதிய சுகாதார அமைச்சரான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கண்டி போதன வைத்தியசாலைக்கு நேற்று(22)விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை சந்தித்து வைத்தியசாலை தொடர்பான பிரச்சனைகளை அறிந்து கொண்டதுடன் .  வைத்தியசாலை விடுதிகளைபார்வையிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

 பணிப்பாளர் மற்றும் சில பணியாளர்களுடன் மேற்பார்வை செய்வற்காக அமைச்சர் பல விடுதிகளை பார்வையிட்டார்  அதில் சீரற்ற விடுதி ஒன்றுக்கு சென்றார். பழைய விடுதிகளுள் ஒன்றான 43-வது விடுதியை பார்வையிட்டார்.

அமைச்சர்  அந்த விடுதியின் படுக்கைகளின் இடையே நடந்து, நேராக கழிப்பறையை சென்று பார்வையிட்டுள்ளார். 

கழிப்பறை மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன் துர்நாற்றம் வீசியதோடு. இரண்டு நாள் கழிவுகள் மட்டுமின்றி, அன்றைய நாள் காலை சேகரிக்கப்பட்ட கழிவுகளும்   கதவு வரையிலும் சிதறிக் கிடந்தமையை அவதானித்துள்ளார்.

அமைச்சர் அங்கு கடமையில் இருந்தவர்களிடம் எவ்விதகருத்துக்களையும்ஸ்ரீபகிர்ந்துகொள்ளவில்லை.

 வைத்தியசாலை பணிப்பாளர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றதை அவதானிக்கமுடிந்தது. 

அந்த விடுதியின் பொறுப்பான மருத்துவர், அந் நாளில் கழிப்பறை துப்புரவாளர் வேலைக்கு சமூகம் தரவில்லை என்று கூறினார். ஒரு தாதியர் கீழே உள்ள மற்றொரு விடுதியின் துப்புரவுப் பணியாளரை அழைத்துக் கொண்டுவர சென்றார்.

அமைச்சர் சுற்றி பார்த்த போது .துப்பரவு செய்வதற்கான தூரிகையை கண்டுகொண்டார் உடனே கழிப்பறை துப்பரவு செய்வதற்கான தூரிகையும் வாளியையும் எடுத்துக் கொண்டு அவர் துப்புரவு பணியினை மேற்கொள்ள தொடங்கினார். ஒரு உதவியாளர் உடனடியாக அமைச்சர் கையில் இருந்து தூரிகையை பெறச் சென்றார். ஆனால் அமைச்சர் தூரிகையை அவரிடம் வழங்காது. அவர் தன் துப்புரவு பணியை தொடர்ந்தார்.

 பணிப்பாளர், விடுதியின் பணியாளர்கள், மருத்துவர் மற்றும் தாதியர்கள் அச்சத்தில் உறைந்து நின்றனர். அந் நிகழ்வு 15 நிமிடங்களில் முடிவடைந்தது. அமைச்சர் கழிப்பறையை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்துவிட்டு, கைகளை சுத்தம் செய்து  கொண்டு தனது பார்வையையத் தொடர்ந்தார். அவர் கழிப்பறை சம்பந்தமாக எந்தவொரு ஒரு வார்த்தையோ அல்லது முறைப்பாடு செய்யாது அங்கிருந்து சென்றார் 

இவ் விடயம் கண்டி போதனா வைத்தியசாலையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .என பல சமூக ஊடகங்களில் இச்செய்தி பரவியுள்ளன.இம் மாதம் 23 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (23.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இது குறித்தான ஆய்வினை மேற்கொண்டபோது , நாம் கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோவை தொடர்புக்கொண்டு இவ்வாறானதொரு சம்பவம் உண்மையில் இடம்பெற்றதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அமைச்சர் நேற்று (22) வைத்தியசாலைக்கு வரவில்லை என வைத்தியர் அவர் குறிப்பிட்டார். மேலும், தான் அன்றைய தினத்தில் பயிற்சி பட்டறை ஒன்றில் கலந்து கொண்டதாகவும், சமூக வலைதளப் பதிவுகளில் காட்டப்பட்டுள்ளபடி அமைச்சர் வரவில்லை என்றும், மருத்துவமனையில்  குறிப்பிட்டவாறு எந்தச் சம்பவமும் நடக்கவில்லை என்றும் கூறினார். அந்த மருத்துவமனையில் “வார்டு 43” என்ற வார்டு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் அமைச்சர் நலிந்த வைத்தியசாலைக்கு வரவில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கண்டி தேசிய வைத்தியசாலையின் பேஸ்புக் பக்கத்திலும் மேற்படி சம்பவம் பொய்யானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் கண்டி அல்லது நாடளாவிய ரீதியில் எந்தவொரு வைத்தியசாலையில் கண்காணிப்புக்கு பங்குகொள்ளவில்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துப்பரவுப்பணியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சர் என பகிரப்படும் தகவல் தவறானது என்று  கண்டறியப்பட்டது.