ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனையுடன் விடுவிக்கப்பட்ட 15 இந்திய மீனவர்கள்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய மீனவர்கள் 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைதண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய மீனவர்கள் 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைதண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
15 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நேற்று (22) முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது, கடந்த 9ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
முன்னதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை நேற்று (21) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, 15 மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகு உரிமை கோரல் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.