கஞ்சன விஜேசேகர மின்சார சபை தலைவருக்கு அறிவுறுத்தல்!
மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பணியாளர்களின் தகவல்களை தமது அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மின்சார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த பணியாளர்களை சேவையில் இருந்து இடைநிறுத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மின் மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்னதாக அறிவித்திருந்தார்.