இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு - டக்ளஸ்!
இந்திய மீன்பிடிப் படகுகள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் பிரச்சினை, இராஜதந்திர மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்திய மீன்பிடிப் படகுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கடற்படையின் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் குறித்தும் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.