சென்னை நோக்கி தங்கத்தை கடத்த முயன்ற 05 பேர் கைது!
இலங்கையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![சென்னை நோக்கி தங்கத்தை கடத்த முயன்ற 05 பேர் கைது!](https://tamilvisions.com/uploads/images/202306/image_870x_649b4b565aa78.jpg)
இலங்கையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தங்கத்தை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 5 தசம் 65 கிலோகிராமுடைய தங்கத்தை கடத்த முயன்றுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தங்கத்தின் பெறுமதி 107 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் அரைத்திரவ வடிவில் தங்கத்தை கடத்த முயன்றுள்ளமை குறிப்பிடதக்கது.