கரும்புலி மேஜர் ரங்கன் நினைவு சுமந்த "கரம் போட்டி" இரட்டையர் விளையாட்டு போட்டி

1 / 3

1.

கரும்புலி மேஜர் ரங்கன் நினைவு சுமந்த "கரம் போட்" இரட்டையர் விளையாட்டு போட்டி.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தமிழர் கல்வி, கலை, பண்பாட்டு நடுவத்தின் முழுமையான அனுசரணையுடன் தமிழ் பாலம் அமைப்பினரால் கரும்புலி மேஜர்.ரங்கன் அவர்களின் நினைவு சுற்றுக் கேடயத்திற்கான கரம் இரட்டையர் போட்டி 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

12க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இவ் விளையாட்டு விழாவில் பெருமளவில் உறவுகளும் கலந்து சிறப்பித்தனர்.

காலை 9.30 மணி அளவில் இளையோர்களினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, பிரித்தானியா மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. அக வணக்கத்தினை தொடர்ந்து விளையாட்டுக்கள் உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற விளையாட்டு போட்டியின் இறுதியில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

 முதலாம் இடத்தினை Birmingham Carrom groupஜ சேர்ந்த திரு.சற்குணராஜாதிரு.இதயதாஸ் இரட்டையர்களும் இரண்டாம் இடத்தினை Birmingham Carrom groupஜ சேர்ந்த திரு.ரஞ்சன் திரு.உத்தமன் இரட்டையர்களும், முறையே மூன்றாம் நான்காம் இடத்தினை தாயகம் விளையாட்டு கழகத்தினை சேர்ந்த திரு.மோகன், திரு.சசி, திரு.தீபன், திரு.அன்பு ஆகியோர் தட்டி சென்றனர்.

இறுதிச்சுற்றின் ஆட்ட நாயனாக திரு.சற்குணராஜா அவர்களும், சிறந்த தொடர் ஆட்ட நாயகனாக திரு.இதயதாஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இவ் விளையாட்டு போட்டியின் சிறப்பு அம்சமாக கரும்புலி மேஜர்.ரங்கன் நினைவுச் சுற்றுக் கேடயம் அறிமுகப்படுத்தப்பட்டது. கேடயத்தின் அடிப்பாகத்தில் "தாயக மண்ணின் நினைவுகளுடன் தொடரும் எம் பயணம்" எனும் மகுடவாக்கியத்துடன் முள்ளிவாய்க்கால் புனித மண் வைக்கப்பட்டிருந்தது. முதலாம் இடத்தினை பெற்ற இரட்டையர்களுக்குஇவ் நினைவு சுற்று கேடயம் பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அதே இரட்டையர்கள் இத்தொடரில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்நினைவு சுற்றுக் கேடயம் அவர்களுக்கே சொந்தமாகும்.

மேலும் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பண பரிசில்களாக £250.00, £150.00, £100.00 பவுண்ஸ்கள் வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட பணத் தொகையில் முதலாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகள் தலா £50.00 பவுண்ஸ்களையும் இரண்டாம் இடத்தைப் பெற்ற அணி தமது முழுமையான தொகையான £150.00 பவுண்ஸ்களையும் எதிர்வரும் 13.08.2023 அன்று நடைபெற இருக்கும் செஞ்சோலை வளாக படுகொலை நாளை முன்னெடுக்கும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இளையோர்களை ஊக்குவிக்கும் வகையில் மேடையில் வைத்து அவர்களிடமே கையளிக்கப்பட்ட நெகிழ்வான சம்பவம் நடைபெற்றது.

இந்நாள் மாதத்தின் இறுதி ஞாயிறு என்ற வகையில் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் நடைபெறும் மாதாந்த வணக்க நிகழ்வு வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த உறவுகளும், அணிகளும், ஏனையவர்களும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு, இம்மாதத்தில் வீரச் சாவித் தழுவிய மாவீரர்களுக்கும், படுகொலை செய்யப்பட்ட எம் உயிரினும் மேலான மக்களுக்கும் ஈகைசுடர் ஏற்றி, மலர் வணக்கம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next