ஒரு போராளியின் மனைவியாக வாழ்வது..

ஒரு போராளியின் மனைவியாக வாழ்வது..

ஒரு போராளியின் மனைவியாக வாழ்வது எவ்வளவு கடினமானது என்பது ஒரு போராளிக்குக்கூடத் தெரியாது.

அந்தக் கடினமான வாழ்வின் கனதியை போராளியின் மனைவி மட்டுமே அறிவாள்,

மார்க்சை(marx) பற்றி பேசுபவர்கள் நிச்சயம் ஜென்னி (jenny) யை பற்றியும் பேச வேண்டும்.

உலக மாந்தரின் விடுதலைக்காக மார்க்ஸ் உழைத்துக் கொண்டிருந்தபோது 

ஜென்னி லண்டன் நகரத்தின் அடகு கடைகளின் வரிசையில் நின்றிருந்தார்.

அவர் குடும்பத்தின் பாரத்தை ஒருபோதும் மார்க்ஸின் மீது சுமத்தவில்லை.

இப்படித்தான் எங்களின் மனோ அக்காவும் எத்தனையோ எத்தனையோ நெருக்கடிகள்

வரிசையாக வந்த போதிலும், இன்முகத்தோடு எதிர்கொண்டு போராட்டப் பாதையில் முன் நகர்ந்தார்.

விடுதலையின் பணியில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

போராட்ட தோழர்களுக்கு உணவு ஊட்டிய அன்பான அட்சய பாத்திரம் தான் எங்கள் அன்பின் மனோ அக்கா.

விடுதலையின் வரலாற்றில் இவர் பெயரும், இவர் ஆற்றிய பணிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் அவா.

உறங்கா விதையாக துயில் கொள்ளும் நீங்கள் விடுதலையின் நாளில் விழி திறப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்!

அமைதி பெறுக தாயே...!!

அமரர் 

கடமைவீரர் இ.ரஞ்சித்குமார் 

மாவட்ட கண்காணிப்பாளர் முதன்மை ஆய்வாளர்

தமிழீழக் காவல்துறை.

13.03.2022 சிகிச்சையில் இருந்தவாறே மனோ அக்காவுக்காக எழுதிய வரிகள் இவை