துருக்கி நிலநடுக்கம் காரணமாக 600க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை
*துருக்கி நிலநடுக்கம்: 600க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை!*
துருக்கியில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலஅதிர்வில் இடிந்து விழுந்த கட்டடங்கள் தொடர்பாக 600க்கும் மேற்பட்டவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு துருக்கில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த நாட்டு நீதி அமைச்சர் பெகிர் போஸ்டாக் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் உட்பட ஏற்கனவே 184 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, பல புதிய கட்டடங்கள் பாதுகாப்பற்றவை என்று நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 மெக்னிடியுட் அளவான நிலஅதிர்வால் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தநிலையில் துருக்கி நீதியமைச்சரின் கருத்துக்களின் விரைவு தன்மையை வெளிப்படுத்துகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், 113 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நிலஅதிர்வு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள நகரம் ஒன்றின் முதல்வரும் அடங்குவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.