சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலை மேலும் அதிகரிப்பு!
சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் நிலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகளின் கொள்ளவை காட்டிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 வீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு அதிகமாக அரசாங்கம் செலவிடுவதாக குறிப்பிடப்படுகின்றது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் 53 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள 27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகளுக்கான பற்றாக்குறை நிலவுகின்றன.
தற்போதுள்ள கழிவறைகளில் 287 கழிவறைகளை புனரமைக்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகளின் நெரிசலை குறைப்பதற்காக கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் 1,795 கைதிகள் சிறையில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளின் அடிப்படையில் 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில், வன்முறைகள் காரணமாக இரண்டு சிறைச்சாலைகளின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.