23,00,000 சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைக்கத் திட்டம்!
2024 ஆம் ஆண்டில் 23 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டிக் கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு, 15 லட்சம் சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், 14 லட்சத்து 89 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு வருகைத் தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.