நெருக்கடியில் அரிசி இறக்குமதி!
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் வரியை குறைக்குமாறு அல்லது விலையை அதிகரிக்குமாறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தமையினால் அரிசி இறக்குமதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (11) வர்த்தக அமைச்சில் அமைச்சர் வசந்த சமரசிங்கவிற்கும் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இவ்விரு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டதுடன் அதனை அமைச்சர் நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில் அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் நிஹால் செனவிரத்னவிடம் கேட்டபோது, அரிசி இறக்குமதி வரியை குறைக்கும் அல்லது அரிசியின் விலையை அதிகரிக்கும் யோசனையை அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்ததாக தெரிவித்தார்