தாழமுக்கம் பற்றிய எதிர்வு கூறல்!

தாழமுக்கம் பற்றிய எதிர்வு கூறல்!

இம்மாதம் இறுதி வரைக்கும் நான்கு தாழமுக்க பகுதிகள் உருவாகலாம் என எதிர் கூறப்பட்ட நிலையில், 
முதலாவது தாழமுக்கமானது கிழக்கு மாகாணத்துக்கு அண்மையாக நகராமல் கிழக்கு மாகாணத்திற்கு பெரியளவில் மழையைக் கொடுக்காமல்,வட இலங்கையின் ஊடாக சென்றுள்ளது. 

இது நேற்று மாலை முல்லைதீவின் அருகே ஊடறுத்து சென்று, யாழ்ப்பாணம் செல்லாமல் யாழ்ப்பாணத்தின் தெற்காக ஊடறுத்து சென்று,, இன்று (12.12.2024) அதிகாலை தலைமன்னார்,  நெடுந்தீவு இடையே இந்த தாழமுக்க பகுதி  காணப்படுகின்றது. 

இது அடுத்த வரும் 24 மணித்தியாலத்தில் தென் மேற்கு திசையில் நகர்ந்து, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜெல சந்தி பகுதினூடாக நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை மறுதினம் அதாவது 13ஆம் திகதி அதிகாலை அல்லது காலை இது தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம் வழியாக அராபிக் கடல் பிராந்தியத்திற்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.