போலி விசாவில் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றவர் கைது!
போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றைய தினம் கட்டார் விமான சேவையின் ஊடாக தோஹா நோக்கி செல்வதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசித்திருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.