எனது உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன் – மைத்ரிபால

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் எனவும், அது தொடர்பில் நீதித்துறைக்கு தகவல்களை வெளியிட தயார் எனவும் கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி.
இன்று தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உத்தரவாதம் தந்தால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
அத்தோடு, இது தொடர்பில் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தாலோ அல்லது உத்தரவு பிறப்பித்தாலோ அது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என தெரிவித்தார்.
இந்நிலையில், மைத்ரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன் பின்னணியில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எமக்கு பாதுகாப்பு வழங்கும் பட்சத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் உண்மைகளை வெளியிடுவேன் என அவர் மீண்டும் தெரிவித்துள்ளார்.