எரிபொருள் விற்பனைக்கான உடன்படிக்கையில் சினோபெக் அடுத்த மாதம் கைச்சாத்து
*எரிபொருள் விற்பனைக்கான உடன்படிக்கையில் சினோபெக் அடுத்த மாதம் கைச்சாத்து!*
இலங்கை வந்துள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்றுக்கும், அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
எரிசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் சில்லறை எரிபொருள் விற்பனைக்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும், விற்பனை நடவடிக்கைகளைத் தொடங்குவது தொடர்பிலும் அதற்கான காலக்கெடு, தொடர்புடைய ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் மற்றும் பிற கவலைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது..
அதற்கமைய, மே மாதத்தின் நடுப்பகுதியில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்றும், அதன் செயல்பாடுகள், அன்றிலிருந்து 45 நாட்களுக்குத் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பில் அமைச்சின் அதிகாரிகள், இலங்கை மத்திய வங்கி , முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டதாக அமைச்சர் ட்விட்டரில் தெரிவித்தார்.