போலி ஆவணங்களோடு இறக்குமதியான மினி கூப்பர் கார் பறிமுதல்!
போலி ஆவணங்களோடு இறக்குமதிய செய்யப்பட்ட மினி கூப்பர் கார் லஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களோடு இறக்குமதிய செய்யப்பட்ட மினி கூப்பர் கார் லஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மினி கூப்பர் காரை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு போலி ஆவணத்தை பயன்படுத்தி குறித்த கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பின்னர் 2015ஆம் ஆண்டு முச்சக்கரவண்டிக்கான பதிவின் கீழ் குறித்த காரை பதிவு செய்தமையின் ஊடாக 25 லட்சம் ரூபா வரி மோசடி இடம்பெற்றுள்ளதாக லஞ்ச - ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றுக்கு இன்று நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளது.