இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி - இந்தியா முதலில் துடுப்பாட்டம்!

இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி - இந்தியா முதலில் துடுப்பாட்டம்!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று இடம்பெறுகிறது.

இன்றைய போட்டியில் இலங்கை  மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இதுவரையான போட்டிகளுக்கு அமைய 12 புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 7வது இடத்திலும் உள்ளன.

Cricket Live Today