ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனைகளை பதிவு செய்வாரா?

ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனைகளை பதிவு செய்வாரா?

இந்திய மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சில புதிய சாதனைகளை பதிவு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

குறித்த போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் 20 போட்டிகளில் 94 விக்கட்டுக்களை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அதேநேரம், இன்னும் 6 விக்கட்டுக்களை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா, மற்றும் இங்கிலாந்து மோதிய டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் சுழல் பந்து வீச்சாளர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற இரட்டை சாதனையையும் அஸ்வின் படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டிகளில் 139 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.