வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு!
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வளவ கங்கை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம், சமனலவெவ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் வான் கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த நீர்த்தேக்கத்தின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.