பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவு நாள் நிகழ்வுகள்
பிரான்ஸ் இன் தலைநகர் பரிசில் பிரான்ஸ் தமிழர் வர்த்தக சங்கத்தின் ஆதரவில் கடந்த 12 நாட்களாக தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்று வந்து கொண்டிருந்தன. இந்நிகழ்வுகளில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தத்தமது வசதிக்கேற்ப வந்து திலீபன் அவர்களுக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தி இருந்தனர் . பன்னிரண்டாம் நாளான நேற்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் அவ்விடத்தில் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக திலீபன் அவர்களுக்கு வணக்கத்தை தெரிவித்திருந்தனர்.