இலங்கையின் பல பாகங்களில் இடைக்கிடை மழை!

இலங்கையின் பல பாகங்களில் இடைக்கிடை மழை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.