யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 16 கைதிகள் விடுதலை!
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த தவறியமையினால் சிறையில் உள்ள கைதிகள் இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் 1004 பேர் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.